ரூ.9,871 கோடி மத்திய அரசு விடுவிப்பு - தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம், 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதில் தமிழகத்துக்கு183 புள்ளி 67 கோடி கிடைத்துள்ளது.
x
17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம், 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதில் தமிழகத்துக்கு183 புள்ளி 67 கோடி கிடைத்துள்ளது.

17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான பகிர்வுக்கு பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 3வது மாதத் தவணைத் தொகை, 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய நிதியமைச்சகம் இன்று விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு 183 புள்ளி 67 கோடி  ரூபாய் கிடைத்துள்ளது. இந்த 3வது தவணை விநியோகத்துடன், மொத்தம் 29 ஆயிரத்து 613கோடி, இந்த நிதியாண்டில் முதல் 3மாதத்தில், பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு விடுவித்தது. தமிழகத்துக்கு 3வது தவணையாக 183 புள்ளி 67 கோடியும், ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் சேர்த்து மொத்தம் 551 புள்ளி 01 கோடி ரூபாயும் விடுவித்தது.

Next Story

மேலும் செய்திகள்