தனியார் மையங்களில் தடுப்பூசி விலை எவ்வளவு? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் என்ன விலையில் தடுப்பூசிகளை வழங்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்....
x
வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் என்ன விலையில் தடுப்பூசிகளை வழங்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்....


வருகிற 21 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கும் மத்திய அரசு, புதிய தடுப்பூசி திட்டத்திற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


அதில் மாநிலத்தின் மக்கள் தொகை, தொற்று பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும்.


தடுப்பூசி டோஸ்கள் வீணானால் ஒதுக்கீடு குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசியை பெறுவதற்கு உரிமை உள்ளது என்றும்,
 
எனினும் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகளை என்ன விலைக்கு வழங்கலாம் என்ற பட்டியலையும் அரசு அறிவித்துள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசியின் விலை அதிகமாக உள்ளது.
  
கோவிஷீல்டு டோசின் கொள்முதல் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாக உள்ளது. இதனுடன் 5 சதவீத ஜிஎஸ்டி வரியான 30 ரூபாய் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணம் 150 ரூபாயை சேர்த்து 780 ரூபாய்க்கு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

கோவாக்சின் டோசின் கொள்முதல் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. அதனுடன் 5 சதவீத ஜிஎஸ்டி வரியான 60 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் 150 ரூபாயை சேர்த்து ஆயிரத்து 410 ரூபாய்க்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்புட்னிக்-வி யின் கொள்முதல் விலை 948 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி 47 ரூபாய் 40 பைசா மற்றும் சேவைக் கட்டணம் 150 ரூபாயை சேர்த்து ஆயிரத்து 145 ரூபாய்க்கு வழங்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.
 
மேலும் தனியார் தடுப்பூசி மையங்களில் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் வவுச்சர்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்