ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்

மகராஷ்டிரா மாநிலம் புனேவில் ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்
x
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். புனே அருகே பிரங்கூட் பகுதியில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான ரசாயனத்தை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. பிற்பகலில் ஊழியர்கள் பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டது. ரசாயன ஆலை என்பதால் தீ மளமளவென பரவியதால், தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஊழியர்களை மீட்க கடுமையாக போராடினர். இருப்பினும், ஆலையில் சிக்கிய 17 ஊழியர்களும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்களது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். Next Story

மேலும் செய்திகள்