சிறுமிகளின் ஆபாச படங்களை தேடிய 28 பேர் கைது - அதிரடி காட்டிய காவல்துறை

கேரளாவில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் தேடியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் என, 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிகளின் ஆபாச படங்களை தேடிய 28 பேர் கைது - அதிரடி காட்டிய காவல்துறை
x
கேரளாவில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் தேடியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் என, 28 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள காவல்துறையின் சைபர் டோம் என்ற பிரிவு மாநிலம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொண்டது. இதன் முடிவில், 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 310 பேர் கொண்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் கடந்த ஞாயிறு அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கேரளா  முழுவதும் 176 பகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட சோதனையில், 5 வயதிலிருந்து 16 வயதுக்குட்பட்ட  சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைக்கப்பட்டிருந்ததாக மொபைல் போன், மோடம், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு, லேப்டாப், கம்ப்யூட்டர் உட்பட 429 உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  சோதனையின்போது கைது செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் பல உயர்ந்த துறைகளில் பணிபுரியும் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. தாங்கள் கற்றறிந்த நவீன தொழில்நுட்ப உதவியுடன் சிறுமிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்