18+ அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் மத்திய அரசு - பிரதமர் மோடி உரை ( தமிழில் )

18+ அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் மத்திய அரசு - பிரதமர் மோடி உரை ( தமிழில் )
x
ஜூன் 21 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 
  
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக போராட தனிப்பட்ட மருத்துவமனைகள், வெண்டிலேட்டர்கள் உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டினார். 
 
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்த‌தாக குறிப்பிட்ட பிரதமர், 
அதனை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். 

 
ஏப்ரல் , மே மாதங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்த‌தை ஒப்புக்கொண்ட பிரதமர், ரயில் மற்றும் விமானம் மூலம் கொண்டு சென்று ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக கூறினார். 
 
இந்தியாவில் ஒரே ஆண்டுக்குள் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 தடுப்பூசிகள் பரிசீலனையில் உள்ளதாகவும் பிரதமர் கூறினார். 
 
இதேபோல, பல்வேறு மாநிலங்கள், தடுப்பூசி வாங்கும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த‌தன் விளைவாக அனுமதி அளித்த‌தாகவும், அதன் பின்,தடுப்பூசி கிடைப்பதில் என்ன குறைபாடு என்பதை உணர்ந்த மாநிலங்கள், மத்திய அரசின் திட்டத்தை பாராட்டி, அந்த திட்டமே தொடர வேண்டும் என கோரியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 
 
இந்தியா முழுவதும் வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என கூறிய பிரதமர், இலவச தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்கள், தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்