"தலைமை கூறினால் ராஜினாமா செய்வேன்" - கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கருத்து
பாஜக தலைமை உத்தரவிட்டால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என்று, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை உத்தரவிட்டால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என்று, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை பாஜக தலைமை மாற்ற விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள எடியூரப்பா, கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்துள்ளார். பாஜகவில் மாற்று தலைமை இல்லை என கருதவில்லை என்று கூறியுள்ள அவர், டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வரையில் முதலமைச்சராக இருப்பேன் என்று கூறினார். அவர்கள் சொல்லும் போது பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். இதனிடையே எடியூரப்பா ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளார்.
Next Story

