கொரோனா இரண்டாம் அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு
x
இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள இந்த தகவலில், நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்து பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.இதேபோல் ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், ஜார்கண்ட் மாநிலத்தில் 39 மருத்துவர்களும் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டிலேயே குறைவாக உத்தரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.இதேபோல் தமிழகத்தில் 21 மருத்துவர்களும், புதுச்சேரியில் 1 மருத்துவரும் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்