லட்சத்தீவு விவகாரம்; கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டு உள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எதிரான மனுக்களை,விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 2 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டு உள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எதிரான மனுக்களை,விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 2 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.லட்சத்தீவு நிர்வாகியின் நிர்வாக சீர்திருத்தங்களை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றத்தில் 2பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மலப்புரத்தை சேர்ந்த கே.பி நவ்சாத் அலி மற்றும் கேரள மாநில காங்கிரஸ கட்சி செயலாளர் காவரட்டியைச் சேர்ந்த முகமது சாதிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். வரைவு ஒழுங்குமுறையை அமல்படுத்துவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ள தடைவிதிக்க என மனுதாரர்கள் கோரியுள்ளனர். தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள பல நிர்வாக சீர்திருத்தங்கள், தீவின் பாரம்பரியம் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். நில பயன்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வரைவு சட்டத்தின் பல விதிகள், சட்டவிரோதமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் கொண்டவை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 2 வார காலத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
Next Story

