கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
x
கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்  

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கறுப்புப் பூஞ்சைத் தொற்றை எதிர்கொள்வதில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம் என தெரிவித்தார். மேலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் கறுப்பு பூஞ்சை தொற்று பதிவாகி உள்ள நிலையில், 18 மாநிலங்களில்  5 ஆயிரத்து 424 பேர் பாதிப்புக்கு உள்ளாகியதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கறுப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின் -பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்ததோடு, முதற்கட்டமாக 50 ஆயிரம் குப்பிகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் சுமார் 3 லட்சம் குப்பிகள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்