குழந்தைகள் நலன் குறித்து அக்கறை இல்லை - ஜெய்சங்கர் மீது, ஆம் ஆத்மி கட்சி புகார்

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க "சிறப்பு பணிக்குழு" அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் நலன் குறித்து அக்கறை இல்லை - ஜெய்சங்கர் மீது, ஆம் ஆத்மி கட்சி புகார்
x
குழந்தைகள் நலன் குறித்து அக்கறை இல்லை - ஜெய்சங்கர் மீது, ஆம் ஆத்மி கட்சி புகார் 

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க "சிறப்பு பணிக்குழு" அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.தலைநகர் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், ஆலோசனை நடத்தப்பட்டது.மூன்றாவது கொரோனா அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க "சிறப்பு பணிக்குழு" அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான அளவுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் வசதி மற்றும் மருந்துக இருப்புகளை உறுதிபடுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிங்கப்பூரில் உருவாகியுள்ள உருமாற்றம் பெற்ற புது வகை கொரோனா தொடர்பாக டெல்லி முதல்வர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அதையும் வைத்து பா.ஜ.க. மோசமான அரசியல் செய்து வருவதாக, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை மறைமுகமாக சாடியுள்ளார். நாட்டில் உள்ள குழந்தைகள் நலன் குறித்து அக்கறையோ, கவலையோ கொள்ளாமால், சிங்கப்பூர் குறித்து தான் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கவலை கொள்கிறது எனவும் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்