ஆந்திரா, தெலுங்கானா சட்ட மேலவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆந்திர, தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
x
ஆந்திர, தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர்கள் 3 பேர், தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் மே 31 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் முடிவடைகிறது.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 16வது பிரிவின் கீழ், காலியாகும் மேலவை உறுப்பினர் இடங்களுக்கு, பதவிக் காலம் முடியும் முன்பே, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இது குறித்து இன்று ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள நிலைமை சீராகும் வரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சட்ட மேலவை தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என முடிவு செய்துள்ளது.மாநிலங்களின் கருத்துக்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் ஆணைய அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பின் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்