2 - 18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி - கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை

சிறார்களுக்கு செலுத்தும் கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை மேற்கொள்ள, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
2 - 18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி - கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை
x
பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு செலுத்தக்கூடிய கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கி, முதற்கட்ட பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டது. இந்நிலையில், முதற்கட்ட பரிசோதனை முடிவுகளை சமர்ப்பித்து, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்குமாறு, மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதன் மீதான பரிசீலனைக்கு பிறகு, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாம் என செவ்வாய் கிழமை பரிந்துரை வழங்கியிருந்தது.தற்போது, நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று  இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.டெல்லி மற்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், 525 தன்னார்வலர்களிடம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்