இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என வகைப்படுத்தி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு
x
இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு 

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என வகைப்படுத்தி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா 2-வது அலை வீரியமாக இருப்பதற்கு கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட பி.1. 617 என்ற இரட்டை உருமாற்ற வைரஸ்தான் எனக் கூறப்படுகிறது.இந்தியாவில் வைரஸ் உருமாற்றங்கள் இ484க்யூ, எல்484கே மற்றும் எல்452ஆர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எல்452ஆர் வகை வைரஸ்கள் மனிதர்களை தாக்கினால் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும் தன்மை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், ஒரிஜினல் வைரசை விடவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது எனவும் மனித உடலில் தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பு சக்திகளுடனும் இவை போராடக்கூடியவை என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என வகைப்படுத்தி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்