"கடந்தாண்டு பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் 90 நாள் பரோல்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ,உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் , தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு சில உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்தாண்டு பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் 90 நாள் பரோல் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ,உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் , தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு சில உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, ஏற்கெனவே பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி திகார் சிறை உள்ளிட்ட சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிடுவது போல, பிற மாநிலங்களிலும் அந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுமுடக்கம் அமலில் இருக்கும் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்படும் கைதிகள், வீடு சென்று சேர போக்குவரத்து வசதி செய்து கொடுக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கொரோனா பரவலை தடுக்க அவ்வப்போது சிறை அதிகாரிகள், பணியாளர்கள் , கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பிணையில் செல்ல விரும்பாத கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை சிறையில் செய்து கொடுக்க வேண்டும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்