ஜன. 13 முதல் தடுப்பூசி போடப்படும்" - மத்திய அரசு

ஜனவரி 13 முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜன. 13 முதல் தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு
x
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூசன், இதற்காக முதல்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி கர்னலில் தடுப்பூசி ஒட்டு​மொத்த சேமிப்பு மற்றும் விநியோக மையங்கள் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.  படிப்படியாக நாடுமுழுவதும் 37 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு செயல்படும் என அவர் கூறினார். தற்போது கொரோனா தீவிரம் உள்ள நோயாளிகள் நாட்டில் இரண்டரை  லட்சம் பேர் தான் உள்ளதாகவும், கொரோனா பாதிப்பு விகிதம் 1.97 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  44 சதவீத நோயாளிகள் மருத்துவமனையிலும், 56 சதவீதம் பேர் வீடுகளிலும் தனிமை​ படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ராஜேஷ்பூசன் தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்