இன்னும் இரு தினங்களில் தீபாவளி - மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதி

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் உள்ள சந்தைகளில், தீபாவளி பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.
இன்னும் இரு தினங்களில் தீபாவளி - மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதி
x
கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் உள்ள சந்தைகளில், தீபாவளி பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாடுகளை மறந்த மக்கள், கூட்டல் நெரிசலில் சென்று, புத்தாடை, இனிப்பு, வீட்டு அலங்காரப்பொருட்கள், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். சந்தைகளில் அதிக அளவில் திரளும் மக்கள் கூட்டத்தால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை எதிரொலி - விற்பனைக்கு குவிந்த வண்ண மலர்கள்

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சந்தைகளில் மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. சந்தைக்கு வரும் மக்கள் சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பல ரக மலர்களை தங்களின் தேவைக்கேற்ப மாலையாகவோ, உதிரியாகவோ வாங்கிச் சென்றனர்.  

மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு - பசுமை தீபாவளி கொண்டாட வலியுறுத்தல் 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சங்கம்ஹாத் ஆற்றங்கரையில், மணல் சிற்பம் மூலம் பசுமை தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு, இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். பசுமை பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் காற்று மாசு அடைவதை தடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என அவர்கள் அறிவுறுத்தினர். 



Next Story

மேலும் செய்திகள்