ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x

நேற்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் டெல்லியிலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, மதியம் 1 மணியளவில் சிம்லாவை அடைந்து, நேராக சரப்ராவுக்கு சென்றுள்ளார். கட்சியைச் சேர்ந்த யாரையும் சந்திக்க அவருக்கு எந்த திட்டமும் இல்லை என கூறப்படுகிறது. நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி, பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பீகாரி கஞ்ச், அரேரியா மற்றும் கிஷன்கஞ்சில் பேரணிகளில் உரையாற்றுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Next Story

மேலும் செய்திகள்