ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
x
ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.  நடப்பு கூட்டத் தொடரி​ன் ஐந்தாவது அமர்வு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கூடுகிறது. இதில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இன்று சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரவை தலைவர் சி.பி.ஜோஷி நேற்று ஆய்வு செய்தார். முக கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 
Next Story

மேலும் செய்திகள்