கார் மீது மினி லாரி நேருக்குநேர் மோதல் அதிர்ஷ்டவசமாக 3பேர் உயிர் தப்பினர்

காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3பேர் உயிர் தப்பினர்.
கார் மீது மினி லாரி நேருக்குநேர் மோதல் அதிர்ஷ்டவசமாக 3பேர் உயிர் தப்பினர்
x
புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி தேவநாதன். இவர் வழுதாவூர் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக தனது மனைவி அலமு மற்றும் மகன் ராமலிங்கத்துடன் இன்று காலை காரில் சென்றுகொண்டிருந்தார். உலவாய்க்கால் அருகே எதிரே செங்கல் ஏற்றி வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டு இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 3பேரும் உயிர் பிழைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்