இந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படை இணையும் என எதிர்ப்பார்ப்பு

இந்த ஆண்டு இறுதியில் மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா உடன் ஆஸ்திரேலியாவும் கை கோர்க்க உள்ளது.
இந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படை இணையும் என எதிர்ப்பார்ப்பு
x
இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியாக மலபார் பயிற்சி கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு இதில் ஜப்பான் இணைந்தது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு பயிற்சி, கடந்த 2018 ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த நிலையில்,  இந்தாண்டு இறுதியில் மலபார் கூட்டு பயிற்சி வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதயில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்சார் பாதுகாப்பில், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா விரும்புவதால், இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு கூட்டு பயிற்சியை, கடலில் தொடர்பில்லா முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயற்சி, பங்கு பெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். இந்த ஆண்டு, மலபார் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாடுகள், கடற்சார் பாதுகாப்பையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்