வெள்ளத்தில் தத்தளிக்கும் ஐதராபாத் - பெரும்பாலான இடங்களில் 150 மிமீக்கு மேல் மழை

தொடர் கனமழையால் ஐதராபாத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஐதராபாத் - பெரும்பாலான இடங்களில் 150 மிமீக்கு மேல் மழை
x
நகரின் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய 150 மில்லி மீட்டருக்கும் மேல் பொழிந்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு மாடிக்கு மேல் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். பாலநகர் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு இடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. விமான நிலையம் செல்லும் சாலை வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள சேத மதிப்பு 6 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் புதன்கிழமை வரை தெலுங்கானா மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்