லடாக் எல்லையில் பாதுகாப்பு பணி - நடனமாடி இந்திய வீரர்கள் உற்சாகம்

லடாக் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் நடனமாடி தங்களை உற்சாகப் படுத்திக் கொண்டனர்.
லடாக் எல்லையில் பாதுகாப்பு பணி - நடனமாடி இந்திய வீரர்கள் உற்சாகம்
x
லடாக் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்  நடனமாடி தங்களை உற்சாகப் படுத்திக் கொண்டனர். பாங்காங் சோ பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சீன வீரர்கள், பலருக்கு பணி மற்றும் புதிய சூழல் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்கப்படுவது போன்ற வீடியோக்கள் சீன ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், அங்குள்ள இந்திய வீரர்கள், உள்ளூர் மொழி பாடல்களுக்கு எந்தவித சிரமமுமின்றி வெகு இயல்பாக நடனமாடி தங்களை உற்சாகப்படுத்தி கொண்டனர். 

"நவம்பரில் இந்தியா வரும் 3 ரபேல் போர் விமானங்கள்" - மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தகவல்

பிரான்சில் இருந்து, நவம்பர் மாதத்தில் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அரசிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 3 அல்லது 4 ரபேல் விமானங்கள் நவம்பர் மாதத்தில் இந்தியா கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், பிரான்ஸ் சென்றுள்ள இந்திய விமானப்படையின் துணை மார்ஷல் என்.திவாரி தலைமையிலான குழு இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினரிடம் சரணடைந்த தீவிரவாதி - ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல்


ஜம்மு காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்னர் தீவிரவாதக் குழுவில் இணைந்த இளைஞரை, பாதுகாப்புப் படையினர் உயிருடன் சரணடைய வைத்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவில், கைகளை உயர்த்தியபடி வரும் ஜகாங்கீர் என்கிற இளைஞரை ஆறுதல்படுத்தி ராணுவவீரர் ஒருவர் சரணடையச் செய்கிறார். அந்த இளைஞரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  Next Story

மேலும் செய்திகள்