உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா - குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடியூரப்பா

கடந்த 400 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுமக்கள் இன்றி மைசூர் தசரா விழா நடைபெற இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா - குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடியூரப்பா
x
உலக புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவை  முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் கொரோனா போராளிகள் குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக மைசூர் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  வழக்கமாக தசரா காலத்தில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் அரண்மனை வளாகத்தில் தான் நடைபெறும். இந்த ஆண்டு பொது மக்கள் அனுமதி இல்லாததால் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராஜ தர்பார் நிகழ்ச்சியில் கூட அரச குடும்பத்தின் முக்கிய நபர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல தசரா விழாவின் இறுதிநாளான்று நடைபெறும் ஜம்பு சவாரி வழக்கமாக ஏழு கிலோ மீட்டர் வரை செல்லும். ஆனால் இம்முறை அரண்மனை வளாகத்திற்குள்ளேயே ஜம்பு சவாரியானது முடித்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுமக்கள் இன்றி நடைபெறும் தசரா விழா நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் ஒளிபரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்