கொரோனா - "சிலைகளுக்கான ஆர்டர் கடுமையாக பாதிப்பு" - துர்கா சிலை வடிவமைப்பாளர்கள் கவலை

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.
கொரோனா - சிலைகளுக்கான ஆர்டர் கடுமையாக பாதிப்பு - துர்கா சிலை வடிவமைப்பாளர்கள் கவலை
x
மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இதனைக் கொண்டாம் விதமாக பிரம்மாண்டமான துர்கா சிலைகள் நகரை வலம் வரும். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, சிலைகளுக்கான ஆர்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டை விட பாதி அளவுக்கும் குறைவாகத் தான் ஆர்டர்கள் வந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இன்று நவராத்திரி முதல் நாள் பூஜை - சமூக இடைவெளியுடன் ஆராதனை 

வடக்கு டெல்லி, கரோல் பாக் பகுதியில் பிரபலமான ஜான்டேவலன் JHANDEWALAN ஆதி சக்தி ஆலயத்தில், நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக கவசம் மற்றும் சமூக விலகலுடன் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. 

வண்ணமயமாக காட்சி தரும் கனக துர்கா கோவில் - விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்


விஜயவாடா நகரின் காவல் தெய்வமாக கருதப்படும், கனக துர்கா கோவில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வண்ணமயமாக காட்சி அளித்தது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திரகீலாத்திரி மலை உச்சியின் மீது அமர்ந்திருக்கும், கனக துர்கா கோவிலில் துர்கா தேவியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்