திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் : "விசாரணைக்கு வந்தபோது சிவசங்கரனுக்கு உடல் நலம் பாதிப்பு" - மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை சுங்கத்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் திடீர் உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் : விசாரணைக்கு வந்தபோது சிவசங்கரனுக்கு உடல் நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
x
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை சுங்கத்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் திடீர் உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சுங்கத்துறையினர், சிவசங்கரனின் வீட்டிற்கு சென்றனர். இதை தொடர்ந்து அவர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, திருவனந்தபுரம் பி.ஆர்.எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால்  சுங்கத்துறை அதிகாரிகள் குழு மருத்துவமனையில் முகாமிட்டுள்ளதனர். 

பா.ஜ.க. வார்டு துணைத் தலைவர் சுட்டுக் கொலை - இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் கொலை 

உத்தரப் பிரதேச மாநில பெரோசாபாத் பா.ஜ.க. வார்டு துணைத் தலைவர் டி.கே.குப்தா அடையாளம் தெரியாத நபர்களால் அமர் உஜலாவில் உள்ள அவரது மளிகை கடையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இரவு 8 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடி உள்ளனர். இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட டி.கே.குப்தா உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவு வருகிறது. 

தீராத செல்பி மோகம் - புனேவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேர்

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், புனே நகரில் உள்ள ஆற்றில் கட்டப்பட்டு உள்ள பாபா பிடி பாலத்தின் மீது செல்பி எடுக்க முயன்ற போது, ஆற்றுக்குள் தவறி விழுந்த 2 பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில், இருட்டியதை தொடர்ந்து இன்று அப்பணி தொடரும் என தீயணைப்பு மற்றும் மீட்புத் பணித்துறை தெரிவித்துள்ளது.


வெள்ளக்காடாக மாறியுள்ள வட கர்நாடகா - நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மகாராஷ்டிராவில் உள்ள உஜ்ஜயினி அணை நிரம்பி வழிகிறது.  அந்த அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால், பீமா நதி பாய்ந்தோடும் கர்நாடகாவின் வட மாவட்டங்களான,பிஜாப்பூர், வெல்கம், மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெல்கம் மாவட்டத்தில் சிக்கோடி தாலுகா, மற்றும் விஜபூர் மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள்,  நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அணையில் இருந்து மேலும் அதிகமாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை, மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

நவராத்திரி விழா பந்தலில் தீ விபத்து

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட நவராத்திரி பந்தலில் நேற்றிரவு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடு​மை - 2 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே சாச்செண்டியில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் 12 வயது சிறுமி படுகொலை - வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் பாலியல் வன்முறை

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள ராம்கர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரப்படும் என மாவட்ட எஸ்.பி. ஆம்பர் லக்கரா தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் தியேட்டர்கள் திறப்பு - "ரசிகர்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை"

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்கு பின்னர் அரியானா மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு முறைகள் முறையாக கடைபிடிக்கப்படும் நிலையில், மக்கள் வரத்து குறைவாகவே உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அங்கீரித்த 50 சதவீத அளவு கூட நிரம்பவில்லை என்பது, மக்களிடையே இன்னும் அச்சம் உள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கனக துர்கா மற்றும் பென்ஸ் சர்க்கிள் மேம்பாலம் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்

ஆந்திர மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள கனகதுர்கா மற்றும் பென்ஸ் சர்க்கிள் மேம்பாலங்களை காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். மேலும், சுமார் 8 ஆயிரம் ​கோடி ரூபாய்  மதிப்பிலான முடிவுற்ற 10 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும், ஏழாயிரத்து  600 கோடி மதிப்பிலான 16 திட்டங்களுக்கும் கட்கரி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.











Next Story

மேலும் செய்திகள்