கேரள தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரம் - பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம்

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கேரள தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரம் - பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம்
x
கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக விசாரித்து வருகிறது. கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு, கடத்தலில் பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் குழுக்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் நிதியை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது என்ற உளவுத்துறையின் உள்ளீடுகளையும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராமீஸ், விசாரணையின் போது தான்சானியாவில் வாங்கிய தங்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை செய்ததாக கூறியிருக்கிறார். இதுபோன்று தாவூத் குழுவும் தான்சானியாவில் வைர தொழிலில் ஈடுபட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் இருக்கும் தொடர்பு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்