வட்டிக்கு வட்டி விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து

இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
x
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை விசாரித்த நீதிபதிகள், 2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான கடன் பெற்றவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை என்றனர். அப்போது, மத்திய அரசு மற்றும் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த வங்கிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்தன. இந்நிலையில் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்