கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை - சோதனை வெற்றி

கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை - சோதனை வெற்றி
x
இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.  தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ளது. ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை, ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணையை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்துள்ளன.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்