"விஞ்ஞானத்தை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கை" - பிரதமர் மோடி உரை தமிழில்

டெல்லியில் "வைபவ்" என்ற பெயரிலான இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
x
டெல்லியில் "வைபவ்" என்ற பெயரிலான இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்திய அரசின் முக்கிய குறிக்கோள் என்றார். அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகள்

சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருவதாக, வைபவ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு தனித்துவமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

"பல மாதங்களாக கருத்துக்களை கேட்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கம்"

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, பல மாதங்களாக கருத்துக்களை கேட்டு அறிந்த பிறகே, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது பல இளம் திறமைசாலிகளை வளர்க்கும் என்றும் கூறினார். பல வரலாற்று கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்