ரிலையன்ஸ் நிறுவனத்தில் "சில்வர் லேக்" முதலீடு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் நாடு தழுவிய அளவில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் முதலீடு
x
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் நாடு தழுவிய அளவில் ஈடுபட்டுள்ளது.  இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் என்ற நிதி நிறுவனம் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1 புள்ளி ஏழு ஐந்து சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக கணிக்கப்படுகிறது. சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 ஆயிரத்து 202 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது

Next Story

மேலும் செய்திகள்