லடாக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் குவிப்பு - சமூக வலைதளங்களில் பரவிவரும் புகைப்படம்

லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் பயங்கர ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டு உள்ளது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
லடாக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் குவிப்பு - சமூக வலைதளங்களில் பரவிவரும் புகைப்படம்
x
கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் சோ ஏரி பகுதியில், இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம், சீன படையினரே இந்திய முகாமுக்கு அருகில் வந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு லடாக்  பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகள் மற்றும் துப்பாக்கிகளுடன் சீன படையினர் நிற்பது போன்ற  படங்கள்  தற்போது வெளியாகியுள்ளன,.  இந்த படங்கள் கிழக்கு லடாக்கின் முகாபரி என்ற இந்திய கண்காணிப்பு சாவடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,. 


Next Story

மேலும் செய்திகள்