"இளைஞர்களை முன்னோக்கி அழைத்து செல்லும்" - புதிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

தேசிய கல்வி கொள்கை யாரும் எதிர்பாராத வகையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை முன்னோக்கி அழைத்து செல்லும் - புதிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
x
தேசிய கல்வி கொள்கை யாரும் எதிர்பாராத வகையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக 2 லட்சம் மக்கள் மற்றும் 2,500 கிராம பஞ்சாயத்துக்கள் சுமார் 675 மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடிப்படையில் புதிய கல்வி கொள்கை இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டின்  விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களை புதிய கல்விக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்