"பூங்காவில் உடற்பயிற்சி செய்த எங்களை தாக்கினர்" - நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார்

பெங்களூருவில் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தன்னையும் தனது நண்பர்களையும் பொதுமக்கள் தாக்கியதாக நடிகை சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பூங்காவில் உடற்பயிற்சி செய்த எங்களை தாக்கினர் - நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார்
x
தமிழில் 'கோமாளி' 'பப்பி'  'வாட்ச்மேன்', உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா. இவரும் இவரது நண்பர்களும் பெங்களூவில் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் அரைகுறையாக ஆடை அணிந்திருப்பதாக கூறி, கவிதா ரெட்டி என்பவர் தட்டிக்கேட்தாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் கூடும் பொது இடத்தில், இப்படி அரைகுறையாக உடற்பயிற்சி செய்ய வரலாமா என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது எழுந்த வாக்குவாதத்தில், சம்யுக்தா ஹெக்டேவை, சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.  இந்த தாக்குதல் வீடியோவை நடிகை சம்யுத்தா, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் - தாக்குதல் காட்சியை இணையத்தில் பதிவிட்ட நடிகை சம்யுக்தா ஹெக்டே

இது குறித்து காவல் நிலையத்தில், சம்யுத்தாவும், கவிதா ரெட்டியும்  ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்,  தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று, சம்யுக்தா இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்