ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம்
பெங்களூரு நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி வீட்டில் கடந்த வாரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை செய்து வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், பெங்களூரு நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கம்மனஹள்ளி என்ற பகுதியில் உள்ள உணவு விடுதியில் சோதனை செய்த போது, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, மாத்திரை வடிவிலான போதைப் பொருட்கள் மற்றும் 200 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தென்னிந்தியாவில், இது மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள் பறிமுதல் என்றும், இதில் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story