சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விவகாரம் - சுஷாந்த் காதலி உள்பட பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அவரது தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பீகார் மாநிலம் ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விவகாரம் - சுஷாந்த் காதலி உள்பட பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்  மரணம் தொடர்பாக அவரது தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பீகார் மாநிலம் ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் தமது மகனின் வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் மாயமாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மகனின் காதலி ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்துள்ளார். இந்த பணமோசடி தொடர்பான விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. திங்களன்று இது தொடர்பாக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்கரவர்த்தி ஆஜராகி, 2015 முதல் 2020 வரையிலான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி மற்றும் சித்தார்த்த பிதானி, சுஷாந்த் சகோதரி மீத்து சிங்கிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்