3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா

கர்நாடகாவில், தொழிலதிபர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த மனைவியின் மெழுகு சிலை அமைத்து பல கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா
x
கர்நாடகாவில், தொழிலதிபர் ஒருவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த மனைவியின் மெழுகு சிலை அமைத்து பல கவனத்தையும் ஈர்த்துள்ளார். மெழுகு சிலை மனைவியுடன், புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தனை தத்ரூபமாக தமது மனைவியை, மெழுகு சிலையாக வடித்து அழகு பார்த்து வருகிறார், கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சீனிவாச குப்தா....கடந்த 2017 ஆம் ஆண்டு, சீனிவாச குப்தாவின் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மனைவியின் நினைவாக வாழ்ந்து வந்த அவர், மனைவியின் உருவத்தை மெழுகு சிலையாக அமைத்துள்ளார். பின்னர் தாம், சொந்தமாக கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் மனைவியின் மெழுகு சிலையை அமர வைத்து 2 மகள்கள் மற்றும் உறவினர்களுடன் புதுமனைபுகுவிழாவை உற்சாகமாக கொண்டாடினார். பாசமுள்ள கணவரின் வித்தியாசமான அன்பை புதுமனை புகுவிழாவுக்கு வந்த உறவினர்கள் வெகுவாக பாராட்டினர். அவரது இரு மகள்களும், தமது தாயின் மெழுகு சிலையை, அலங்கரித்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்,  சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்