விளைபொருட்களை விரைவாக கொண்டு செல்ல விவசாய ரயில் - விவசாயிகளுடன் உரையாடுகையில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லியில் விவசாய கட்டமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
விளைபொருட்களை விரைவாக கொண்டு செல்ல விவசாய ரயில் - விவசாயிகளுடன் உரையாடுகையில் பிரதமர் மோடி அறிவிப்பு
x
புதுடெல்லியில், விவசாய கட்டமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசுகையில் விவசாயிகள் குறைந்த அளவிலான யூரியாவை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வேளாண் உற்பத்தியை நடப்பு ஆண்டில் அதிகரிக்க செய்த மத்திய பிரதேச விவசாயிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.மகாராஷ்டிராவில் இருந்து பீகார் வரை விவசாய ரயில் சேவை தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்த ரயில் மூலம் பீகார், உத்தர பிரதேச விவசாயிகளும் பயன் அடைய உள்ளதாக தெரிவித்தார். வேளாண் விளைப் பொருள்களை லாரிகளில் அனுப்புவதால் ஏற்படும் சிரமங்களை  விவசாய ரயில் சேவை குறைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்