சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு

சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சீனாவைச் சேர்ந்த, டிக் டாக் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகள் கடந்த மாதத்தில்  தடைச் செய்யப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் 47 செயலிகள் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான 250 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இந்தியா- சீனா இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், வர்த்தக செயல்பாடுகளிலும் சிக்கல் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 


 


Next Story

மேலும் செய்திகள்