நாடு முழுவதும் 14 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - இன்று புதிதாக 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 661 பேர் தொற்று உறுதியானதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் 14 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - இன்று புதிதாக 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி  8 லட்சத்து 85 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 32 ஆயிரத்து 63 பேர் இறந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 3 லட்சத்து 66 ஆயிரத்து 368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 7ஆயிரத்து194 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 51 ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 531 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளானநிலையில், 1 லட்சத்து13 ஆயிரத்து 68 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர். கர்நாடகத்தில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரத்து 942 பேரில், 33 ஆயிரத்து 750 பேர் நலமடைந்துள்ளனர். ஆந்திராவில்  88 ஆயிரத்து 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 43 ஆயிரத்து 255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்