சுஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும் : "பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க தயார்..." - பாலிவுட் நடிகை கங்கனா அதிரடி

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார் நடிகை கங்கனா. ட்விட்டரில் இது டிரெண்டிங் ஆன நிலையில், சக நடிகைகளுடன் மோதல் போக்கும் அரங்கேறியது.
சுஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும் : பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க தயார்... - பாலிவுட் நடிகை கங்கனா அதிரடி
x
பாலிவுட் திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார், சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து இந்திய முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

இந்நிலையில் கடந்த மாதம் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை கொடுத்தது. அவரது மரணத்திற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் காரணமாக கூறப்பட்டது. சுஷாந்துக்கு வந்த பட வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் சுஷாந்த் சிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சுஷாந்த் சிங்குக்கு ஆதரவாக பேசிவரும் கங்கனா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றால், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பேன் என அதிரடியாக தெரிவித்தது, பலரது புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

இந்நிலையில், #SushantTruthNow எனும் ட்விட்டர் உலகளவில் நேற்று டிரென்டிங் ஆனது. இதற்கிடையே, நடிகை டாப்ஸி,  ஸ்வாரா பாஸ்கரை, வாய்ப்பு தேடுபவர்கள் என்றும், அழகாக இருந்தும் பி கிரேடு நடிகைகளாகவே ஏன் இருக்கிறீர்களே? என்றும் கங்கனா கேட்டிருந்தார். 

இது சர்ச்சையான நிலையில், நடிகை டாப்ஸி, "இதற்கு முன் நாங்கள் நம்பர் ஒன், நம்பர் டூ எண்களில் தரப்படுத்தப்பட்டோம், சரியா?' என கேள்வி எழுப்பினார். நடிகை ஸ்வாரா பாஸ்கரோ, இதை தனக்கான பாராட்டாக கருதுகிறேன் என பெருந்தன்மையுடன் கூறினார்.

அதேநேரம் ட்விட்டரில் சிலர், 'டாப்ஸியை பி கிரேடு என்றால் நீங்கள் என்ன ஆஸ்கர் லெவல் நடிகையா? முதலில் ஒரு ஹிட் படமாவது கொடுங்கள் என கங்கனாவை கலாய்த்துள்ளனர்.  இன்னும் சிலர், கங்கனா கூறியிருப்பதை பாராட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் டாப்ஸி என்று தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்