ஊடகங்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யாநாயுடு பாராட்டு
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக, ஊடகங்களுக்கு, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக, ஊடகங்களுக்கு, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். பரவலின் பல்வேறு அம்சங்கள் குறித்து மக்களுக்குத் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், அச்சமடைந்து இருக்கும் மக்களோடு இணைந்து செயலாற்றுவதாகவும் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். ஊடகம் தன்னார்வச் செயல்பாட்டுடனும் போர்க்கால அடிப்படையிலும் பணியாற்றாவிட்டால், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிடம் ஏற்பட்டு விடக்கூடும் என்று, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யாநாயுடு தெரிவித்தார்.
63 விமான நிலையங்களில் நவீன தானியங்கி சோதனை முறை - பழைய சோதனை முறைக்கு பதிலாக புதிய நவீன கருவிகள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, இந்தியா முழுவதும்
63 விமான நிலையங்களுக்கு தானியங்கி உடல் பரிசோதனை கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே இருக்கும் நிலைக் கதவு வடிவிலான டிடெக்டர்களுக்கு பதிலாக புதிய கருவிகள் இடம்பெற உள்ளதாக தெரிவித்தனர். பயணிகளை கைகளால் சோதனை செய்வது, உலோகப் பொருள்களைக் கண்டறியும் ஸ்கேனர்களும் தானியங்கி முறைக்கு மாற்றப்பட உள்ளன. 63 விமான நிலையங்களுக்கு 198 நவீன கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 கருவிகள் சென்னைக்கும்,17 கருவிகள் கொல்கத்தவுக்கும், 12 கருவிகள் புனே விமான நிலையத்துக்கும் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம் : கடற்கரை கிராமம் பாதிப்பு - வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் அச்சம்

கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள செல்லனாம் என்ற கடற்கரை கிராமம், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலால், வீடுகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கனமழையால் துண்டிக்கப்பட்ட 10 கிராமங்கள் - கிராம மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள சாலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.இதையடுத்து பாதிக்கப்பட்ட பட்சேரி என்ற கிராம மக்கள், கயிறு கட்டி மீட்கப்பட்டனர். அவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசி பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
Next Story

