இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.78 லட்சம்

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.78 லட்சம்
x
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 28 ஆயிரத்து 701 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 500 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரத்து 850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இதுவரை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து ஆயிரத்து 609 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 23 ஆயிரத்து 174 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்