முடிவில்லாத அன்பும், நன்றியும் - அமிதாப்பச்சன்

கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நலம்பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முடிவில்லாத அன்பும், நன்றியும் - அமிதாப்பச்சன்
x
கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நலம்பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா மற்றும் என்மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குணமடைய பிராத்தனை, வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் முடிவில்லாத அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அன்புகாட்டிய அனைவருக்கும் பதிலளிக்க முடியாத சூழலில் உள்ளதாக பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், அதனால்தான் என் கைகளை ஒன்றாக வைத்து சொல்கிறேன் என்றும், உங்கள்  அன்பு மற்றும் பாசத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்