விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - பாதுகாப்பு கேட்டு கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மனு

விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.
விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - பாதுகாப்பு கேட்டு கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மனு
x
விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா,  தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அதில், விகாஸ்துபே ஆதரவாளர்களால் தனக்கும், தனது மனைவிக்கும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். எனவே பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவேண்டும் என்றும் ,அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - ஒரு நபர் ஆணையம் அமைத்து ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவுஉத்தரபிரதேசத்தில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட, விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கை விசாரிக்க, ஒரு நபர் ஆணையம் அமைத்து, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார். கான்பூரில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ்துபேவை கைது செய்ய சென்ற போலீசாரை, அவரும், அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து  விகாஸ் துபே என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்