ஸ்வப்னா சுரேஷ் சென்ற கார் திடீரென பஞ்சர் - மாற்று வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்வப்னா

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் சந்தீப் நாயர் ஆகியோர் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
x
அவர்களை தனித்தனி காரில் என்ஐஏ அதிகாரிகள் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.  வாளையாறு சோதனை சாவடியை அடுத்த வடக்கஞ்சேரி பகுதியை கடக்கும் போது கார் திடீரென பஞ்சர் ஆனது. இதையடுத்து உடனடியாக ஒரே காரில் கொச்சி நோக்கி புறப்பட்டனர். அந்த காரில் ஸ்வப்னாவுடன் அவரின் கணவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர். பெண் அதிகாரி உட்பட 10 பேர் கொண்ட என்ஐஏ குழு அவர்களை அழைத்து சென்றது. ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர்  ஆகியோரை என்ஐஏ  அதிகாரிகள் ஆலுவா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் கொச்சி என் ஐ ஏ அலுவலகத்திற்கு அழைத்து செல்ல உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்