நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு - 8.49 லட்சம் ஆக உயர்வு - ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 28,637

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 ஆயிரத்து 637 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு - 8.49 லட்சம் ஆக உயர்வு - ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 28,637
x
இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 551 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது  நாடு முழுவதும் 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்