விகாஷ் துபே இறந்தாலும் தொடரு​ம் அச்சுறுத்தல் - கான்பூர் எஸ்.பி.

உத்தரபிரதேசத்தை கலக்கிய பிரபல ரவுடியான விகாஷ் துபே சுட்டுக் கொல்லப்பட்டாலும், அவருடைய கும்பலால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
விகாஷ் துபே இறந்தாலும் தொடரு​ம் அச்சுறுத்தல் - கான்பூர் எஸ்.பி.
x
உத்தரபிரதேசத்தை கலக்கிய பிரபல ரவுடியான விகாஷ் துபே சுட்டுக் கொல்லப்பட்டாலும், அவருடைய கும்பலால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தினேஷ்குமார், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார். ரவுடி விகாஷ் துபே என்கவுன்ட்டர் வழக்கில் பிரதானமாக செயல்பட்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து மனம் திறந்திருக்கிறார் தினேஷ்குமார். விகாஷ் துபே உடன் தொடர்பில் இருந்த காவல் அதிகாரிகள் பலரையும் நீக்கி விட்டு நேர்மையான காவல் அதிகாரிகளை நியமித்து ஒரு குழு அமைத்ததாகவும், இந்த புதிய குழுவை வைத்தே விகாஷ் துபேவை கண்காணித்து கைது செய்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே பணியில் இருந்த பழைய காவலர்கள் விகாஷ் துபேயிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டார்கள் என கூறியிருக்கிறார். விகாஷ் துபே கூட்டாளிகளில் இன்னும் சில முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டி இருப்பதாக கூறி இருக்கும் அவர், உ.பி. போன்ற ஒரு மாநிலத்தில் பணியாற்றுவது சவாலாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். விகாஷ் துபே கும்பலிடமிருந்து காவல்துறைக்கு இன்னமும் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே தான் இருப்பதாக கூறியிருக்கும் தினேஷ்குமார், காவல் நிலையத்துக்குள் புகுந்து மாநில அமைச்சரையே சுட்டுக் கொன்ற கும்பல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த கும்பலால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்து தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக துணிச்சலாக கூறியிருக்கும் இவர், விகாஷின் மரணத்தால் அவர்கள் பதிலடி கொடுக்க முயற்சி செய்வார்கள் என்றும், அதனை தாங்கள் துணிச்சலாக எதிர்கொள்வோம் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்