195 பகுதியில் தீவிர தொற்று - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்

கேரளாவில் ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
195 பகுதியில் தீவிர தொற்று - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்
x
கேரளாவில் ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே தொற்று ஏற்பட்ட 234 பேரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவியதாக அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய167 பேர், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 76 பேர், 7 பேர் பாதுகாப்பு படையில் இருந்து திரும்பியவர்கள் என்றும் பினராயி விஜயன் கூறினார். தீவிர தொற்று உள்ள ஹாட் ஸ்பாட் பகுதியாக கண்டறியப்பட்டு, 195 பகுதிகளை பாதுகாப்பு வளையத்தில் வைத்து கண்காணிப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்