கொரோனா பாதிப்பு - முதல் 5 மாநிலங்கள் நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டிய நிலையில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்...
கொரோனா பாதிப்பு - முதல் 5 மாநிலங்கள் நிலவரம்
x
முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 1 லட்சத்து 32 ஆயிரத்து 625 பேர் குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்து 943 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9 ஆயிரத்து 893 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உள்ள நிலையில், மாநில அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 82 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 829 ஆக உள்ளது.மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 140 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 84 ஆயிரத்து 694 பேர் அங்கு குணமடைந்துள்ளனர். 21 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 69 ஆக உள்ளது. 28 ஆயிரத்து147 பேர் குணமடைந்து உள்ளனர். 9 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 ஆயிரத்து 22 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் இதுவரை 33 ஆயிரத்து 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கு 21 ஆயிரத்து 787 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 11 ஆயிரத்து 24 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 889 ஆக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்