சாலையோர கண்காணிப்பு கேமராவில் கார் பதிவு - சுவப்னா சுரேஷை தீவிரமாக தேடிவரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ் தென்காசி அருகே பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சாலையோர கண்காணிப்பு  கேமராவில் கார் பதிவு - சுவப்னா சுரேஷை தீவிரமாக தேடிவரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்
x
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாட்டு தூதரக அலுவலகத்திற்கு வந்த பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கேரள அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில்  முக்கிய புள்ளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ்  உள்ளிட்ட 3 பேரை என். ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் 
சுவப்னா சுரேஷ் தமிழகத்திற்கு தப்பி வந்து தென்காசி அருகே பதுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரது  கார் திருவனந்தபுரம் செங்கோட்டை சாலையில் சென்றதாக தகவல் வெளியான நிலையில் , அவ்வழியே  சந்தேகத்திற்குரிய ஒரு கார் மின்னல் வேகத்தில் சென்றது சாலையோர கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. சுவப்னா சுரேஷ் செங்கோட்டை வழியாக வந்து தென்காசி மாவட்டத்தில் எங்கேனும் தலைமறைவாக தங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரகசிய விசாரணை தீவிரமாக  நடைபெற்று வருகிறது. சுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை கேரள உயர்நீதிமன்றம்  வரும் செவ்வாய் கிழமைக்கு  ஒத்தி வைத்துள்ளது.  தங்க கடத்தல் சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ள சுவப்னா சுரேஷ் , தற்கொலை மிரட்டலுடன் ஆடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்